எத்தனை எத்தனை பெருமைகள் எம் மண்ணில்

தூத்துக்குடி..!
தென்கோடி  தமிழகம் இது என்றாலும்
பார் போற்றும் ஊர் என்றே
நான் பார்க்கிறேன்...!

எத்தனை எத்தனை பெருமைகள்
அத்தனையும் எம் மண்ணில் என்பதில்
இருமாப்பும் கொள்கிறேன்..!
என் ஊர் இது என்றே- நானும்
இருமாப்பு கொள்கிறேன்..!

நடை பழகியதும்..
நட்பின் விரல் கோர்த்து
வாழ்வின் விடை தேடியதும்
இம் மண்ணில்...

ஆம்..! அம் மண்ணில்  இன்று
வெள்ளி விழா கொண்டாட்டம்

தோல்வியின் வாட்டம்
வெற்றியின் ஆட்டம் -என
எல்லாம் தந்த எம் மண்ணின்
கொண்டாட்டம்..!

வீசும் காற்றும்
விடியலின் வெளிச்சமும்
அலையாடும் கடலும்
அன்போடு வாழ்த்தும்
எம் மண்ணின் கொண்டாட்டம்..!

இதில் என் வாழ்த்தும்
ப்திவாகட்டும்..!

அறுபடை ஆண்டவனும், வைகுண்டபதி சாமியும் 
கோயில் கொண்டதும் இங்குதான்..!
காப்பியங்கள் போற்றும் திருத்தலங்கள் கண்டதும்
அதிசய கடல் மாதாவின் திருவிழாவும் இங்குதான்

ஊர் போற்றும் கதைகள் ஆயிரம்-
எம் மண்ணின் கதைகள் ஆயிரம்
வரலாறு பேசும் வீரம் விளைந்ததும்
காலத்தை வென்ற மகாகவி.. பிறந்ததும்
எம் மண்ணில் தான்..!

கப்பலோட்டிய தமிழனும், கட்டபொம்மனும்
எம் மண்ணில் விதைத்த வீரம்- அதுதான்
நம் நாட்டின் விடுதலைப் போருக்கே உரம்

வாழ்க பாரதம்.. வளர்க புகழ்

0 Comments: